டிகே இயக்கவுள்ள பேய் படத்தில் நடிகை காஜல் அகர்வாலுடன் நடிகரும் நடன இயக்குனருமான பிரபுதேவா நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகியாக வலம் வரும் நடிகை காஜல்அகர்வால் விஜய்,அஜித் போன்ற முன்னணி கதாநாயகர்களுடன் பல ஹிட் படங்களில் நடித்துள்ளார் . தமிழில் மட்டுமல்லாது தெலுங்கு, ஹிந்தி மொழி படங்களிலும் அசத்தி வருகிறார் . கடந்த சில மாதங்களுக்கு முன் நடிகை காஜல் அகர்வால் கௌதம் கிச்சலு என்ற தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்குப் பின்னும் இவருக்கு பட வாய்ப்புகள் குவிந்து வருகிறது . இவர் தற்போது நடிகர் சிரஞ்சீவியின் ‘ஆச்சர்யா’ மற்றும் நடிகர் கமலின் ‘இந்தியன் 2’ மற்றும் கல்யாண் இயக்கும் கோஸ்ட்டி ஆகிய திரைப்படங்களில் பிஸியாக நடித்து வருகிறார் .
இந்நிலையில் யாமிருக்க பயமேன் படத்தை இயக்கிய டிகே இயக்கத்தில் உருவாக உள்ள பேய் படத்தில் நடிக்க நடிகை காஜல்அகர்வால் ஒப்பந்தமாகியுள்ளார். இதையடுத்து இந்தப் படத்தில் நடிகரும் நடன இயக்குனருமான பிரபுதேவா கதாநாயகனாக நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது . இதன் மூலம் முதல்முறையாக நடிகர் பிரபுதேவா காஜல் அகர்வாலுடன் இணைந்து நடிக்க உள்ளார் . இதுதவிர மேலும் இந்த படத்தில் இரண்டு கதாநாயகிகள் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது .