புதுச்சேரி மாநிலம் புதுசாரம் பகுதியில் வசிப்பவர் ஏழுமலை. இவருக்கும் விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த சிவபாக்கியம் என்பவருக்கும் பிப்ரவரி 1ஆம் தேதி திருமணம் நடைபெற்றது. இதையடுத்து இந்த தம்பதிகள் புதுச்சேரியில் தனியாக வசித்து வந்துள்ளனர். இதையடுத்து ஏழுமலை தன்னுடைய மனைவியிடம் அடிக்கடி சொத்து மற்றும் நகை கேட்டு துன்புறுத்தி வந்துள்ளார். இதுகுறித்து அறிந்த சிவபாக்கியத்தின் பெற்றோர்கள் தாலி பிரித்து போடும்போது நகை மற்றும் வீட்டு பத்திரத்தை தருவதாக கூறியுள்ளனர். ஆனாலும் ஏழுமலை தொடர்ந்து மனைவியை துன்புறுத்தி வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று மீண்டும் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
அப்போது நள்ளிரவில் சிவபாக்கியம் இறந்து விட்டதாக அவருடைய குடும்பத்தாருக்கு ஏழுமலை தகவல் அளித்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த சிவபாக்யத்தின் பெற்றோர்கள் புதுச்சேரிக்கு வந்து மகளின் உடலை பார்த்து கதறி அழுதுள்ளது. மேலும் காவல் நிலைத்தில் ஏழுமலை மீது புகார் அளித்தனர். ஏழுமலை தான் தங்களுடைய மகளை கொலை செய்து விட்டார் என்றும் அவரை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று காவல் நிலையம் முன்பாக முற்றுகை போராட்டம் நடத்தியுள்ளனர். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.