Categories
மாநில செய்திகள்

கல்யாணமாகி 2 மாதம் தான் ஆகுது… அதுக்குள்ள இப்படியா…? காதல் மனைவிக்கு நேர்ந்த கொடூரம்…!!!

இல்லற வாழ்க்கையை ஆரம்பித்த இரண்டே மாதத்தில் காதல் மனைவியின் கழுத்தை அறுத்து கணவன் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

மத்தியபிரதேச மாநிலத்தில் வசிக்கும் தம்பதிகள் ஹர்ஷ் சர்மா-அனுஷூ(22). இவர்கள் இருவரும் ஒருவரையொருவர் காதலித்து வந்ததால் இரண்டு மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர். இதனிடையே புதுமண தம்பதிகள் இருவருக்கும் சில தினங்களாக அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் சண்டை முற்றியதால் கோபம்  அடைந்த ஷர்மா தனது மனைவியின் கழுத்தை இரும்பாலான சங்கிலியை கொண்டு இறுக்கி கொல்ல முயன்றுள்ளார்.

சங்கிலியை வைத்து கொல்ல முடியவில்லை என்பதால், சமையல் அறைக்கு சென்ற சர்மா அங்கிருந்த கத்தியை எடுத்துக்கொண்டு வந்து தனது மனைவியின் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார். இதனால் ரத்த வெள்ளத்தில் அனுஷூ பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்நிலையில் சர்மா தனது மனைவியை கொன்றதாக கூறி காவல் நிலையத்தில் சரண் அடைந்ததோடு நடந்த எல்லாவற்றையும் வாக்குமூலமாக கூறியுள்ளார்.  உடனே காவல்துறையினர் அங்கு சென்று இறந்து கிடந்த அனுஷூ உடலை கைப்பற்றினர். மேலும்  கொலையாளியான சர்மாவிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |