Categories
இந்திய சினிமா சினிமா

கல்யாணம் ஆகாமல் கர்ப்பம் ஆகலாம்….. அதனால் என்ன?…. பிரபல தமிழ் நடிகை ஓபன் டாக்….!!!!

திருமணம் செய்யாமல் குழந்தை பெறுவதில் என்ன தவறு உள்ளது என்று நடிகை தபு பரபரப்பு கருத்தை தெரிவித்துள்ளார்.

ஹிந்தி, தெலுங்கு, தமிழ், மலையாளம் மொழிகளில் நடித்த பிரபலமானவர் தபு. இவர் ஒரு மாடல் அழகிய ஆவார். இவர் தமிழில் காதல் தேசம் என்ற திரைப்படத்தின் மூலமாக என்ட்ரி கொடுத்தார். அதன் பிறகு இருவர், தாயின் மணிக்கொடி, கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், சினேகிதி, டேவிட் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். இவருக்கு தற்போது 51 வயது ஆகின்றது. இதுவரை இவர் யாரையும் திருமணம் செய்து கொள்ளவில்லை.

இந்நிலையில் திருமணம் செய்து கொள்ளாமல் குழந்தை பெறுவதில் என்ன தவறு உள்ளது என்று நடிகை தபு பரபரப்பு கருத்தை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் அளித்துள்ள பேட்டியில் தெரிவித்ததாவது “திருமணத்திற்கும், குழந்தை பெற்றுக் கொள்வதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. எனக்கும் தாயாக விருப்பம் உள்ளது. அதற்கு திருமணம் செய்து கொள்ள வேண்டியதில்லை. திருமணம் செய்யாமலேயே தாயாக முடியும். ஏன் வாடகை தாய் மூலமாக குழந்தை பெற்றுக் கொள்ள முடியும்” என்ற இவரின் இந்த கருத்து விமர்சனத்தை ஏற்படுத்தி உள்ளது.

Categories

Tech |