திருமணமாகி 3 வருடமாகியும் குழந்தை இல்லாத காரணத்தினால் இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது
தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள திருபுவனம் பகுதியை சேர்ந்தவர்கள் விஜய் மற்றும் பவித்ரா தம்பதியினர். இவர்களுக்கு திருமணமாகி மூன்று ஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லாத காரணத்தினால் பவித்ரா மிகுந்த மன உளைச்சலில் இருந்துள்ளார். இதனால் பவித்ராவின் தந்தை தனது மகளை அவரது உறவினர் வீட்டில் தங்க வைத்திருந்தார். இத்தகைய நிலையில் பவித்ரா கழிவறைக்கு சென்று வருவதாக கூறி சென்ற நிலையில் வெகு நேரமாகியும் வெளியே வரவில்லை.
இதனால் உறவினர்கள் சந்தேகம் அடைந்து சென்று பார்த்தபோது பவித்ரா தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டார். இதனை தொடர்ந்து உறவினர்கள் பவித்ராவை மீட்டு சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் பவித்ரா இறந்துவிட்டதை உறுதி செய்துள்ளனர். இதுகுறித்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜெகதீசன் விசாரணை நடத்தி வருகிறார்.