சீரியல்களின் மூலம் மிகவும் பிரபலம் அடைந்தவர் நடிகை மௌனி ராய். நாகினி என்ற சீரியலின் மூலம் தமிழ், தெலுங்கு என அனைத்து மொழிகளிலும் இவர் பிரபலம் அடைந்தார். இதனைத் தொடர்ந்து அவருக்கு சினிமா வாய்ப்புகள் வரத் தொடங்கின. ஒரு சில படங்களில் நடித்து கொடுத்தார் நடிகை மௌனி ராய் .இவர் கடந்த 3 ஆண்டுகளாக துபாயில் வசித்து வரும் கேரளாவைச் சேர்ந்த தொழிலதிபர் சுராஜ் நம்பியாரை காதலித்து வருவதாக கூறப்பட்டது.
இந்நிலையில் இவர் சுராஜ் நம்பியாரை திருமணம் செய்து கொண்டார். இவருடைய திருமண போட்டோக்கள் இணையதளங்களில் வைரலாக பரவி வருகிறது. கோவாவில் உள்ள ஐந்து நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் இவர்களது திருமணம் விமரிசையாக நடைபெற்றது. அதோடு திருமணத்திற்குப் பிந்தைய பார்ட்டியில் நடிகை மௌனி ராய் தனது காதல் கணவருக்கு லிப் லாக் கொடுத்தார். இதனை பார்த்த சீரியல் நடிகரானஅர்ஜுன் முகத்தை வேடிக்கையாக வைத்துக்கொண்டு அதனை வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டார். இந்த வீடியோ தற்போது இணையதளங்களை கலக்கி வருகிறது.