உத்தரகாண்ட் மாநிலம் ஹல்த்வானியைச் சேர்ந்த இளம் பெண் ஒருவருக்கு நவம்பர் 5ஆம் தேதி பெரியோர்கள் முன்னிலையில் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டுள்ளது. இதனை அடுத்து மாப்பிள்ளை தான் திருமணம் செய்ய போகும் மணப்பெண்ணிற்கு விலை உயர்ந்த திருமண உடைகளை அனுப்பி உள்ளார். இதனையடுத்து அந்த உடை பிடித்துள்ளதா என்று கேட்டுள்ளார் மாப்பிள்ளை. ஆனால் அந்த உடை பிடிக்கவில்லை என்று மணப்பெண் கலாட்டா செய்துள்ளார்.
இதனால் இரு குடும்பத்தினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. கடைசியில் வாக்குவாதம் முற்றி திருமணமே நின்றது. பின்னர் அந்தப் பெண் தன்னுடைய தவறை ஒப்புக்கொண்டு அதே மாப்பிள்ளையை திருமணம் செய்துள்ளார்.