Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

கல்யாணம் நின்னதுக்கு இப்படியா…? விரக்தியில் இளைஞர்…. எடுத்த விபரீத முடிவு…!!

திருமணம் நின்றதால் இளைஞர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள தக்கலை பகுதியை சேர்ந்தவர் தங்கராணி.இவருடைய மகன் விஜய் (25). இவருக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்ட நிலையில் திருமணம் நடைபெறாமல் நின்றுவிட்டது . இதனால் அவர்  கடந்த சில நாட்களாக யாரிடமும் சரியாக பேசாமல் மனக் குழப்பத்துடன் இருந்துள்ளார் . இந்நிலையில் தூங்குவதற்காக புதிதாக கட்டப்படும் வீட்டிற்கு  சென்றுள்ளார் .

மறுநாள் காலை நீண்ட நேரமாகியும் விஜய்  வெளியே வராததால் அவரது தாயார் விஜயை தேடிச் சென்றுள்ளார். அங்கு அவரது  மகன் தூக்கில் தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார் .இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விஜயின் சடலத்தை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |