Categories
தேசிய செய்திகள்

கல்யாணம் பண்ணுனவன விட்டுட்டு…. உன் காதலன் கூட போறியா…? தந்தையின் கொடூரச்செயல்…!!

காதலித்தவனுடன் வாழ ஆசைப்பட்ட மகளை தந்தையே கழுத்தை நெரித்துக் கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ராஜஸ்தானைச் சேர்ந்தவர் பிங்கி சைனி (வயது 9). இவர் அதே பகுதியை சேர்ந்த ரோஷன் என்பவரை காதலித்து வந்துள்ளார். இதற்கு பிங்கியின் பெற்றோர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அதுமட்டுமின்றி அப்பெண்ணுக்கு அவசர அவசரமாக வேறு ஒருவருடன் திருமணம் செய்து வைத்துள்ளனர். இதனால் திருமணம் ஆன அன்றே பிங்கி வீட்டை விட்டு தனது காதலன் ரோஷனுடன் சென்றுள்ளார். அதுமட்டுமின்றி ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்தை அணுகி நாங்கள் சேர்ந்து வாழ விரும்புவதாகவும், எங்களுக்கு பாதுகாப்பு அளிக்குமாறும் கோரிக்கை வைத்துள்ளனர். இதனையடுத்து  அவர்கள் இருவருக்கும் ஜெய்ப்பூர் காவல் நிலையம் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என உயர் நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது.

இந்நிலையில் சம்பவத்தன்று பிங்கியின் தந்தை ரோஷனின் வீடு புகுந்து பிங்கியை கடத்தி கொண்டு போய் சென்று உன் காதலனை விட்டுவிட்டு திருமணம் செய்த பையனுடன் சேர்ந்து குடும்பம் நடத்து என்று வற்புறுத்தியுள்ளார். இதற்கு பிங்கி மறுப்பு தெரிவிக்கவே அவரின் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார். இதனையடுத்து ரோஷன் பிங்கி கடத்தப்பட்டது குறித்து காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். ஆனால் காவல் துறையினர் அதற்கு எந்த ஒரு நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என்று அவர் குற்றம் சாட்டியுள்ளார். இந்நிலையில் பிங்கியின் தந்தை காவல் நிலையத்தில் வந்து சரணடைந்ததால் காவலர்கள் அவரின் மீது கொலை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |