Categories
மாநில செய்திகள்

“கல்யாணராமன் வழக்கு”…. உயர்நீதிமன்றம் கண்டனம்…. எதற்காக தெரியுமா?….!!!!!

தனது மீதான வழக்கை ரத்து செய்யக் கோரிய பா.ஜ.க. பிரமுகர் கல்யாணராமனுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்து உள்ளது.

சமூக வலைத்தளங்களில் சர்ச்சைக்குரிய கருத்து பதிவிட்டதாக பாஜக பிரமுகர் கல்யாணராமனை சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் காவல்துறையினர் கடந்த அக்டோபர் மாதம் கைது செய்தனர். கோபிநாத் என்பவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் அவர் மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து அவர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் தனது மீதான வழக்கை ரத்து செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் கல்யாணராமன் வழக்கு தொடரந்து இருந்தார்.

இவ்வழக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜெகதீஸ் சந்திரா முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது பாஜக பிரமுகர் கல்யாணராமன் நீதிமன்றத்தை மதிக்கமாட்டார், காவல்துறையினரை மதிக்க மாட்டார், சட்டத்தை மதிக்க மாட்டார். அவர் சட்டத்திற்கு அப்பாற்பட்டவரா என்று நீதிமன்றம் கண்டனம் தெரிவித்தது. மேலும் கல்யாணராமனின் கோரிக்கை தொடர்பாக 4 வாரத்திற்குள் மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் பதில் அளிக்க உத்தரவிட்ட நீதிபதி, புகாரை மட்டும் ரத்து செய்யக்கோரி வழக்கு தொடர்ந்துள்ளது ஏன்?.. என்று கேள்வி எழுப்பினார்.

இதனிடையே மனுதாரர் கோபிநாத் சார்பாக இடையீட்டு மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில் முன்பே மேட்டுப்பாளையம் நீதிமன்றத்தில் வெறுப்புணர்வோடு பேசமாட்டேன் என்று மனுத் தாக்கல் செய்துவிட்டு, மீண்டும் பேசுவதாக சுட்டிக் காட்டியுள்ளார். நீதிமன்ற உத்தரவை அவர் மதிப்பதில்லை எனவும் இவரை இரும்புக்கரம் கொண்டு அடைக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார். மத மோதலை உருவாக்கும் வகையில் பேசுவதால் அவர் மீது காவல்துறையினர் வழக்கு தொடர்ந்தது சரிதான் எனவும் அவரது மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டுள்ளார்.

Categories

Tech |