Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

“கல்லறைத் தோட்டத்தை அகற்றக்கூடாது”… எதிர்ப்பு தெரிவித்த பொதுமக்கள்…!!!

கல்லறைத் தோட்டத்தை அகற்றக்கூடாது என்று பொதுமக்கள் மறுப்பு தெரிவித்தார்கள்.

திண்டுக்கல் மாவட்டம், சாணார்பட்டி அருகில் வேலம்பட்டி கிராமத்திற்கு கல்லறை தோட்டம் கொசவபட்டி பகுதியில் அமைந்துள்ளது. இந்த கல்லறை தோட்டம் இருக்கின்ற இடம் நெடுஞ்சாலைத் துறைக்கு சொந்தமானது என்பதால் ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் என்று மதுரை ஐகோர்ட் கிளையில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் கொசவபட்டி உள்ள கல்லறைத் தோட்டத்தை அகற்ற உத்தரவிட்டுள்ளது. அதன்படி நேற்று முன்தினம் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கொசவப்பட்டியில் உள்ள கல்லறைத் தோட்டம் அகற்றப்படும் என்று நோட்டீஸ் ஓட்டினார்கள்.

இத்தகவலை அறிந்த கிராமமக்கள் 300-க்கும் அதிகமானோர் சம்பவ இடத்திற்கு சென்று கல்லறைத் தோட்டத்தை அகற்றக் கூடாது என்று மறுப்பு தெரிவித்தார்கள். மேலும் மாற்று இடம் வழங்கிய பிறகு கல்லறைத் தோட்டத்தை அகற்றவேண்டும் என்று அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இதற்கிடையில் அங்கு வந்த துணை தாசில்தார் தங்கமணி, சாணார்பட்டி காவல்துறையினர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது மாவட்ட உயர் அதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி கொடுத்தனர். இதனை அடுத்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Categories

Tech |