சிறுவன் ஒருவன் கல்லறையில் தாயால் தனித்துவிடப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவில் உள்ள ஓஹியோ என்ற மாகாணத்தில் இருக்கும் கல்லறைத் தோட்டத்தில் 3 வயது சிறுவன் ஒருவன் நாயுடன் தனித்து விடப்பட்டுள்ளான். இதனைத்தொடர்ந்து அச்சிறுவனை விட்டுச்சென்ற அவரின் தாய் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும் கடந்த புதன்கிழமை அன்று மதியம் 11 மணி அளவில் ஓஹியோ மாகாணத்தில் இருக்கும் போப் மெமோரியல் கார்டன்ஸ் என்ற கல்லறையிலிருந்து ஒரு நீல நிற கார் ஒன்று வேகமாக அங்கிருந்து மாயமாகியுள்ளது.
இதனை நேரில் பார்த்ததாக சிலர் அதிகாரிகளிடம் கூறியுள்ளனர். இந்நிலையில் கல்லறையிலிருந்து மீட்கப்பட்டுள்ள சிறுவன் தந்தையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். மேலும் காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையின் படி ,விட்டுச்சென்ற அச்சிறுவனின் தாயார் மருத்துவமனையில் சிகிச்சையில் இருப்பதாக தெரிவித்துள்ளனர். மேலும் அந்த சிறுவனும் அவரின் நாயும் கடந்த கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு 2 நாட்களுக்கு முன்பாகவே கல்லறையில் தனித்து விடப்பட்டுள்ளனர். மேலும் இதனை அறிந்த பொதுமக்கள் பலரும் அச்சிறுவனுக்கு கிறிஸ்துமஸ் பரிசுகளை அள்ளிக் கொடுத்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து விசாரணை மேற்கொள்ளப்படும் என்று காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.