Categories
மாநில செய்திகள்

கல்லறையில் மயங்கி இருந்த நபர்…. தோளில் தூக்கி சென்ற காவல் ஆய்வாளர்…. நெகிழ்ச்சி சம்பவம்….!!

தமிழகத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலத்தின் காரணமாக கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. அதன்படி சென்னையில் நேற்று மாலை தொடங்கிய கனமழை இன்று காலை வரை பெய்து வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. இந்நிலையில் சென்னை கீழ்பாக்கம் கல்லறையில் வேலை செய்து வரும் உதயா என்பவர் கனமழை காரணமாக கல்லறையில் தங்கியிருந்தார். இதையடுத்து கனமழை தொடர்ந்து பெய்ததால் உதயா உடல் பாதிக்கப்பட்டு அங்கேயே மயங்கி உள்ளார்.

அதன் பிறகு அப்பகுதி மக்கள் அவரை அங்கு கண்டு காவல்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர். தகவலறிந்து டிபி சத்திரம் காவல் ஆய்வாளர் ராஜேஸ்வரி விரைந்து வந்து முறிந்து விழுந்த மரங்களை அகற்றினார். அதன் பிறகு அந்த காவல் ஆய்வாளர் ராஜேஸ்வரி உதயாவை தனது தோளில் தூக்கி வைத்து ஆட்டோவில் ஏற்றி கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளார். மேலும் காவல் ஆய்வாளர் அவரை தோளில் தூக்கிச் சென்றது காண்போரை நெகிழச் செய்தது.

Categories

Tech |