அமெரிக்காவை சேர்ந்த யங் சூக் ஆன் மற்றும் அவரின் கணவர் சாய் கியின் ஆகிய இருவருக்கும் நீண்ட காலமாக சொத்து பிரச்சினை இருந்துள்ளது. இதனால் இருவரும் நீதிமன்றத்தில் விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்நிலையில் அக்டோபர் 16ஆம் தேதி சாய் கியொன் மனைவியை கடத்தி கை, கால்களை கட்டி காட்டிற்கு கொண்டு சென்றுள்ளார். அங்கு குழி தோண்டி அவரை குழிக்குள் தள்ளி மேலே இருந்து மண்ணை அள்ளி போட்டு மூடியுள்ளார்.
இருப்பினும் மயக்க நிலையில் இருந்த அவர் சிறிது நேரத்தில் விழித்து சுவாசிப்பதற்காக கல்லறையில் இருந்து மண்ணை நீக்கினார். பின்பு தன்னுடைய கையில் இருந்து ஆப்பிள் வாச்சிலிருந்த உதவி கோரி தன்னுடைய மகளுக்கும் போலீசுக்கும் எச்சரிக்கை செய்தி அனுப்பினார். கிட்டத்தட்ட சுமார் 3 -4 மணி நேரம் கல்லறையில் இருந்துள்ளார். பின் எப்படியோ மண்ணைத் தோண்டி புதைகுழியில் இருந்து வெளியே வந்து காட்டில் அலைந்து அங்கிருந்த ஒரு வீட்டிற்குச் சென்றார். பின், அங்கிருந்து அவர் போலீஸாருக்குத் தகவல் கொடுத்தார். அதன்பிறகு போலீஸ் குழுவால் அவர் காப்பாற்றப்பட்டாளர். அதே நேரத்தில், அடுத்த நாள், அதாவது அக்டோபர் 17 அன்று, அவரது கணவரும் கைது செய்யப்பட்டார்.