இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்தின் பெல்ஜியம் கற்களால் கட்டப்பட்ட கல்லறை புகைப்படம் வெளியிடப்பட்டிருக்கிறது. 96 வயதான இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் கடந்த எட்டாம் தேதி உயிரிழந்துள்ளார். 70 வருடங்களாக இங்கிலாந்தின் ராணியாக இருந்து இவர் சரித்திரம் படைத்துள்ளார். இந்த நிலையில் அவருடைய மறைவுக்குப் பின் ராணியின் மூத்த மகனான மூன்றாம் சார்லஸ் அரசர் பொறுப்பேற்று இருக்கிறார் இறுதி சடங்குகள் சில நாட்களுக்கு முன் நடைபெற்றுள்ளது.
இந்த நிலையில் தற்போது அவருடைய புதைக்கப்பட்ட கல்லறையின் புகைப்படத்தை பக்கிங்காம் அரண்மனை வெளியிட்டு இருக்கிறது. ராணியின் கல்லறை நான்காம் ஜார்ஜ் நினைவு பேராலயத்தில் அமைந்திருக்கிறது கல்லறை முழுவதும் பளபளப்பான பெல்ஜிய கற்களால் கட்டப்பட்டிருக்கிறது. மேலும் கல்லறையின் கல்லில் இங்கிலாந்து ராணியின் பெயர் அவரது கணவர் பிலிப் மற்றும் ராணியின் பெற்றோர்களின் பெயர்களும் எழுதப்பட்டிருக்கிறது. மேலும் ராணியின் தந்தையான ஆறாம் மன்னர் ஜார்ஜின் கல்லறையும் அதே இடத்தில் தான் இருக்கிறது.