கேரளாவில் கல்லீரல் நோயால் பாதிக்கப்பட்ட தந்தைக்கு கல்லீரல் தானம் வழங்குவதற்கு அனுமதி கேட்டு மகள் அளித்த மனுவில் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திருச்சூர் மாவட்டத்திலுள்ள பிரதீஷ் என்பவர் வெகு காலமாக ஹெபடோசெல்லுலர் கார்சினோமா என்ற நாள்பட்ட கல்லீரல் சிதைவு நோயால் பாதிக்கப்பட்டு உள்ளார். இதனால் அவருக்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை தேவைப்பட்டது. இதற்கிடையில் பிரதீஷ்கு பொருத்தமான கல்லீரல் அவரது குடும்ப உறுப்பினர்களிடம் இருக்கிறதா என பரிசோதிக்கப்பட்டது. அப்போது பிரதீஷின் 17 வயது மகளான தேவானந்தாவின் கல்லீரல் அவரது தந்தைக்கு பொருத்தமாக இருந்தது. இதனால் தேவானந்தா கல்லீரல் தானம் வழங்கலாம் என்று மருத்துவர்கள் தெரிவித்தனர்.
எனினும் சட்டப்படி 18 வயது நிரம்பாதவர்கள் உறுப்புதானம் அளிக்க கூடாது என்பதால், கேரள உயர்நீதிமன்றத்தில் அனுமதி கோரி ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதை விசாரித்த நீதிபதி வி.ஜி. அருண் கூறியதாவது, ‘தேவானந்தாவை மகளாக பெற்றவர்கள் அதிர்ஷடசாலிகள் என்று பாராட்டினார். அத்துடன் 5 மாதத்தில் தேவானந்தாவிற்கு 18 வயது நிரம்ப உள்ளதால் கல்லீரலின் ஒரு பகுதியை மட்டும் தானமாக வழங்க அனுமதி அளித்திருப்பதாக நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.