Categories
தேசிய செய்திகள்

“கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை”….. இதுக்கு இனிமே மருத்துவமனையை தேடி அலைய வேண்டாம்….!!!!

புதுச்சேரியில் முதல் முறையாக கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை தனியார் மருத்துவமனையில் தொடங்கப்பட்டுள்ளதாக மருத்துவர் கூறியுள்ளார்.

புதுச்சேரி மாநில முதன்மை சுகாதாரம் மையமாக விளங்குகிறது. இங்கு சிறந்த அரசு மருத்துவமனைகள், தனியார் மருத்துவமனைகள், மருத்துவக் கல்லூரிகள் உள்ளது. இருந்தபோதிலும் உயர் சிகிச்சைகளுக்கு சென்னை உள்ளிட்ட பெரு நகரங்களுக்கு வந்து செல்ல வேண்டிய சூழல் ஏற்படுகின்றது. இதை மாற்ற வேண்டும் என்பதற்காக புதுச்சேரியில் உள்ள ஈஸ்ட் கோஸ்ட் மருத்துவமனையில் உயர் சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்த மருத்துவமனையில் தற்போது கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்ய முடிவு செய்துள்ளனர். இதற்காக நாட்டின் முன்னணி மருத்துவமனையான கிளினிக்கல் குளோபல் ஹெல்த் சிட்டி மருத்துவமனையுடன் இன்று புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டது. இதன் மூலமாக ஈஸ்ட் கோஸ்ட் மருத்துவமனையில் கல்லீரல் ஆலோசனை பிரிவு தொடங்கப்படும். இதன் மூலம் மாற்று அறுவை சிகிச்சை, சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை, இதய அறுவை சிகிச்சை, புற்றுநோய் சிகிச்சை, நரம்பியல் அறுவை சிகிச்சை போன்ற உயர்தர சிகிச்சை முறைகளை கிளினிக்கல் குளோபலுடன் இணைந்து செய்ய முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |