Categories
மாநில செய்திகள்

கல்லூரிகளில் ஷிப்ட் முறை….. பரிசீலனை செய்யப்பட்டும்….. அமைச்சர் பொன்முடி….!!!

தமிழக கல்லூரிகளில் மாணவ மாணவியர்களின் பாலின அடிப்படையில் ஷிப்ட் முறைப்படி அமல்படுத்த பரிசீலனை செய்யப்பட்டு வருவதாக அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளதாவது: ” தமிழகத்தில் மாணவ மாணவியர்களின் பாலின அடிப்படையில் ஷிப்ட் முறைப்படி அமல்படுத்த கோரிக்கை எழுந்து வருகிறது. அதாவது தற்போது உள்ள கல்லூரிகளில் ஆண்கள் காலையிலும்,  பெண்கள் மாலையிலும் வந்து பயிலும் வகையிலான ஷிப்ட் முறையை கொண்டுவர பரிசீலனை செய்யப்பட்டு வருகிறது. மேலும் தமிழகத்தில் 10 கல்லூரிகள் தொடங்குவதற்கான அறிவிப்புகள் வெளியிடப்பட்டு உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்”.

Categories

Tech |