Categories
தேசிய செய்திகள்

கல்லூரிகளுக்கான திருத்தப்பட்ட கால அட்டவணை…. ஏஐசிடிஇ வெளியீடு…..!!!

நாடு முழுவதும் உள்ள கல்லூரிகளுக்கான புதிய கல்வியாண்டுக்கான திருத்தப்பட்ட கால அட்டவணை மற்றும் வழிகாட்டு நெறிமுறைகளை ஏஐசிடிஇ வெளியிட்டுள்ளது. நாட்டில் உள்ள அனைத்து தொழில்நுட்ப கல்லூரிகளும் அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் இன் கட்டுப்பாட்டில் இயங்கி வருகிறது. இந்நிலையில் கொரோனா இரண்டாவது அலை காரணமாக புதிய கல்வியாண்டு தொடக்கமும் மாணவர் சேர்க்கையும் தள்ளி போய் உள்ளது. இதையடுத்து புதிய கல்வி ஆண்டுக்கான கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

அதில் தொழில்நுட்ப கல்லூரிகளுக்கான அங்கீகார இணைப்பை ஆகஸ்ட் 31-ஆம் தேதிக்குள் பல்கலைக்கழகங்கள் வழங்க வேண்டும். நேரடி இரண்டாம் ஆண்டு சேர்க்கைக்கான 30-ஆம் தேதிக்குள் முடிக்க வேண்டும். சேர்க்கை ஆணை பெற்ற மாணவர்கள் அக்டோபர் 20-ஆம் தேதிக்குள் விலகிவிட்டால் முழு கட்டணத்தையும் வழங்க வேண்டுமென தெரிவித்துள்ளது.

Categories

Tech |