தமிழக கல்லூரி முதல்வர்கள், பணியாளர்கள், கல்லூரி கல்வி இயக்கக இணை இயக்குனர்கள் இன்று பணிக்கு வருகை தர வேண்டும் என்று அனைத்து கல்லூரிகளுக்கும் கல்லூரி கல்வி இயக்குனர் பூரணச்சந்திரன் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். வரும் திங்கள், செவ்வாய் மற்றும் புதன் ஆகிய மூன்று நாட்கள் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற உள்ள நிலையில் பட்ஜெட் கூட்டத் தொடருக்கு தேவையான தரவுகளை ஒப்படைக்க இன்று அனைவரும் தவறாது வருகை தர வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார். தமிழகத்தில் இன்று பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், இந்த பட்ஜெட் தொடர்பான விவாதம் மூன்று நாட்கள் நடைபெற உள்ளது. அதனை கருத்தில் கொண்டு கல்லூரிகளுக்கு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
Categories