தமிழகத்தில் கல்லூரிகள் திறக்கப்பட்டால் விடுதி அறையில் ஒரு மாணவர் மட்டுமே தங்க வைக்கப்பட வேண்டும் என்ற பல்கலைக்கழக மானியக் குழு தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கல்லூரிகளை திறப்பது பற்றி பல்கலைகழகங்கள் மற்றும் கல்லூரி நிர்வாகங்களுக்கு பல்கலைக்கழக மானியக் குழு சிறப்பு அறிவுறுத்தல்களை வெளியிட்டுள்ளது. அதில் குறிப்பிடப்பட்டிருப்பது, “கல்லூரிகள் திறக்கப்பட விடுதிகளில் இருக்கின்ற ஒரு அறையில் ஒரு மாணவர் மட்டுமே தங்கியிருக்க வேண்டும். கல்லூரி திறக்கப்பட்ட பின்னர் வருகின்ற விடுதி மாணவர்கள் அனைவரும் 14 நாட்கள் தனிமையில் இருக்க வேண்டும்.
அதன்பிறகு கொரோனா பாதிப்பு இல்லை என்று உறுதி செய்யப்பட்டாலும் அடுத்த 14 நாட்கள் மாணவர்கள் தனிமையில் இருக்க வேண்டும். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக விழுதுகளில் கடுமையான கட்டுப்பாடுகளை மாணவர்கள் பின்பற்ற வேண்டும்” என்று கூறியுள்ளது. ஆனால் நடைமுறையில் இது போன்ற கட்டுப்பாடுகள் அனைத்தும் சாத்தியம் இல்லை என்பதால் உயர்கல்வித்துறை குழப்பத்தில் ஆழ்ந்துள்ளது. அதுமட்டுமன்றி கல்லூரிகள் திறக்கப்படுமா? விடுதிகள் செயல்படுமா? என்று மாணவர்கள் அனைவரும் குழப்பத்தில் உள்ளனர்.