நாடு முழுவதும் கொரோனா பரவல் மீண்டும் வேகம் எடுத்து வருகிறது. இதனால் பலத்த கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட்டுள்ளன. கொரோனாவால் மக்கள் அதிகம் பாதிக்கப்பட்டு நாளுக்கு நாள் இழப்பு விதங்களும் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் தமிழகத்திலும் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் இரவு நேர ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு போன்ற பல கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட்டுள்ளன. இதற்கு மத்தியில் மக்கள் முக கவசம் அணிதல், சமூக இடைவெளியை கடைப்பிடித்தால், சானிடைசர் பயன்படுத்துதல் போன்ற ஒரு வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என்று மாநில அரசு அறிவுறுத்தி வருகிறது.
மேலும் சமூக இடைவெளி உள்ளிட்டவைகளை கடைபிடிக்காவிட்டால் அபராதமும் விதித்து விழிப்புணர்வு செய்து வருகிறது. இந்நிலையில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் சூழலில் அரசு மருத்துவமனைகல் மட்டுமல்லாமல் தனியார் மருத்துவமனைகள், பள்ளிகள், கல்லூரிகள், தொழில் நிறுவனங்கள், பிற கட்டடங்களில் கொரோனா சிகிச்சை மையங்களை ஏற்படுத்த தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அனைத்து மையங்களிலும் மாவட்ட ஆட்சியர்கள் செயலாக்கத்திற்கு கொண்டுவரவேண்டும் என்றும், ஆக்சிஜன் கூடிய படுக்கை வசதிகளை மேலும் அதிகரிக்க வேண்டும் என்றும் தலைமைச் செயலாளர் உத்தரவிட்டுள்ளார்.