Categories
மதுரை மாவட்ட செய்திகள்

கல்லூரிக்கு சென்று வந்த மாணவி…. பேருந்தில் வைத்து கண்டக்டர் செய்த காரியம்…. போலீஸ் அதிரடி…!!!

மதுரை மாவட்டத்திலுள்ள சொக்கலிங்க நகர் 2-வது தெருவில் பாலமுருகன் என்பவர் வசித்து வருகிறார். இவர் அரசு பேருந்தில் கண்டக்டராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் பெரியார் பேருந்து நிலையத்திலிருந்து ஆரப்பாளையம் வழியாக மாட்டுத்தாவணி செல்லும் டவுன் பேருந்தில் பாலமுருகன்(42) கண்டக்டராக பணியாற்றி வந்தார். அந்த பேருந்தில் 17 வயதுடைய மாணவி வழக்கமாக கல்லூரிக்கு சென்று வந்துள்ளார். இந்நிலையில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி பாலமுருகன் மனைவிக்கு பாலியல் ரீதியாக தொந்தரவு அளித்துள்ளார்.

இதனை மாணவி கண்டித்தும் பாலமுருகன் கண்டுகொள்ளவில்லை. இது குறித்து அறிந்த மாணவியின் அண்ணன் பாலமுருகனை தட்டி கேட்டபோது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது பாலமுருகன் மாணவியின் அண்ணனை தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதனால் படுகாயமடைந்த அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்து மாணவி அளித்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்த போலீசார் பாலமுருகனை கைது செய்தனர்.

Categories

Tech |