காணாமல் போன கல்லூரி மாணவியை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கண்டுகொண்டான் மாணிக்கம் கிராமத்தில் சதுரகிரி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படிக்கும் ஆனந்தி என்ற மகள் இருந்துள்ளார். இந்நிலையில் ஆனந்தி கல்லூரிக்கு செல்வதாக பெற்றோரிடம் கூறிவிட்டு சென்றுள்ளார். இதனையடுத்து நீண்ட நேரமாகியும் ஆனந்தி வீட்டிற்கு வராததால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் அவரை பல இடங்களில் தேடியுள்ளனர்.
ஆனால் ஆனந்தி பற்றி எந்த தகவலும் கிடைக்காததால் ஆனந்தியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் காணாமல் போன ஆனந்தி குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.