கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் தடுப்பு சுவர் மீது மோதிய விபத்தில் கல்லூரி மாணவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூர் பகுதியில் இப்ராகிம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அஜ்மல் என்ற மகன் இருந்துள்ளார். இவர் கூடலூர் அரசு கலை அறிவியல் கல்லூரியில் முதலாமாண்டு படித்து வந்துள்ளார். இந்நிலையில் அஜ்மல் மோட்டார் சைக்கிளில் கல்லூரிக்கு புறப்பட்டுள்ளார். இவர் கூடலூர் 2-ஆம் மைல் மீனாட்சி பகுதியில் சென்று கொண்டிருந்த போது திடீரென கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் சாலையில் தாறுமாறாக ஓடி தடுப்பு சுவர் மீது பயங்கரமாக மோதியது.
இந்த விபத்தில் படுகாயமடைந்த அஜ்மலை அருகில் உள்ளவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அஜ்மல் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில் தலையில் ஹெல்மெட் அணிந்து இருந்த போதிலும், வேகமாக வந்ததால் மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது தெரியவந்துள்ளது.