கல்லூரி மாணவியிடம் இருந்து செல்போன் பறித்த வாலிபர்களை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள பெருந்துறையில் ராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஆனந்தி என்ற மகள் உள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் கல்லூரியில் டிப்ளமோ முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில் ஆனந்தி கல்லூரிக்கு நடந்து சென்றுள்ளார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 3 வாலிபர்கள் ஆனந்தியின் கையில் வைத்திருந்த 2 செல்போன்களை பறித்துவிட்டு அங்கிருந்து தப்பி சென்றனர். இதுகுறித்து ஆனந்தி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.