தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வந்த நிலையில் பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளன. அவர்களுக்கு சுழற்சி முறையில் வகுப்புகள் நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் கல்லூரிகள் திறக்கப்பட்டது இலிருந்து மாணவர்கள் வருகை பெரிதும் குறைவாகக் காணப்படுவதாக உயர்கல்வித் துறை கூறியுள்ளது. இந்த செய்தியை தமிழக அரசின் கவனத்திற்கு சென்றுள்ளது. அதாவது மாணவர்கள் தங்கள் குடும்பத்திற்கு உதவி செய்யும் வகையில் விவசாய நிலங்களிலும் வேறு சில வேலைகளிலும் ஈடுபட்டு வருகிறார்கள்.
அதனால் வருவாய் ஈட்டுவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். அதனால் இதன் பின்னணி குறித்து விரிவான அறிவியல் ரீதியிலான முறையில் தகவல்களை சேகரிக்க அரசு திட்டமிட்டுள்ளது. மாநிலம் முழுவதும் கல்லூரிகள் திறக்கப்பட்டதும் இருந்து தற்போது வரை செய்யப்பட்ட ஆய்வில், வழக்கமாக கல்லூரிகளுக்கு வரும் மாணவர்களின் எண்ணிக்கை சரிவை சந்தித்துள்ளது. சென்னை, காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் கல்லூரிகளில் ஒரு வகுப்பிற்கு குறைந்தது 15 முதல் 20 சதவீத மாணவர்கள் வருவதில்லை.
அதுவும் கிராமப் புறங்களின் நிலைமை இன்னும் மோசமாக உள்ளது. மாணவர்களை மீண்டும் கல்லூரிகளுக்கு வரவழைக்க விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த சூழலில் அனைத்து மாவட்டங்களிலும் உயர் கல்வித்துறை சார்பில் ஒரே நேரத்தில் ஆய்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. அடுத்த சில நாட்களில் ஆய்வு முடிவுகள் தொடர்பான தேதி குறித்து இறுதி செய்யப்படும் என கூறப்படுகிறது. இதையடுத்து இனி கல்லூரிக்கு வராமல் எந்த மாணவர்களும் தப்பிக்க முடியாது என தெரிகிறது