இளம்பெண்ணின் ஆபாச வீடியோவை சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
தேனி மாவட்டத்திலுள்ள ஆண்டிபட்டியில் கூலித் தொழிலாளியான கோபிநாதன் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2017-ஆம் ஆண்டு கோபிநாதன் கோயம்புத்தூரில் இருக்கும் ஒரு கல்லூரியில் படித்துள்ளார். அப்போது கோபிநாதனுக்கும் அதே கல்லூரியில் படித்த 22 வயது இளம் பெண்ணுக்கும் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது. இருவரும் அடிக்கடி வீடியோ கால் மூலம் பேசி வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த சில மாதங்களாக கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பேசாமல் இருந்துள்ளனர். இதனை அடுத்து தன்னுடன் அடிக்கடி பேச வேண்டும் என கோபிநாதன் அந்த இளம்பெண்ணை மிரட்டியுள்ளார்.
அப்படி பேசவில்லை என்றால் உனது ஆபாச வீடியோவை சமூகவலைதளத்தில் வெளியிடுவேன் என மிரட்டியுள்ளார். ஆனாலும் அந்த இளம்பெண் கோபிநாதனிடன் பேசவில்லை. இதனால் கோபமடைந்த கோபிநாதன் இளம் பெண்ணின் ஆபாச வீடியோவை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். இதுகுறித்து இளம்பெண் கோவை மாவட்ட சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் கோபிநாதனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.