சீனாவிலுள்ள ஹெனான் மாகாணத்தில் உள்ள ஹெனான் கைபெங் அறிவியல் தொழில்நுட்பம் மற்றும் தொடர்பு கல்லூரியில் மாணவர்கள் கல்லூரிக்கு சரியாக வராமல் இருந்து வந்தனர். இதனால் கல்லூரி நிர்வாகம் ஜாங் என்னும் அழகிய ஆசிரியை ஒருவரை நியமனம் செய்துள்ளது. இதனால் பல்கலைக்கழகம் மீது விமர்சனங்கள் எழுந்து வந்தது. ஜாங் கவர்ச்சியாக இருப்பதினால் பணியமர்த்தப்பட்டதாக பல்கலைக்கழகத்தின் மீது குற்றச்சாட்டுகள் முன்வைத்துள்ளனர்.
இந்த நிலையில் சமூக வலைதளங்களில் எதிர்ப்பு கிளம்பிய சூழலில் ஷாங்கின் திறமைக்காகவே அவரை வேலைக்கு எடுத்ததாக பல்கலைக்கழகம் சார்பில் கூறப்பட்டுள்ளது. பல்கலைக்கழகம் அவருடைய சிறந்த கற்பிக்கும் திறனை நம்பியே வேலைக்கு அமர்த்த முடிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளது. ஜான் தனது வீடியோக்கள் மூலமாக கற்பிக்கும் பாணி மற்றும் அவரது உடல் தோற்றமாகிய இரண்டிற்காகவும் பாராட்டப்பட்டுள்ளார். இருப்பினும் ஜாங் பல்கலைக்கழகத்தில் கல்வியியல் முதுகலை பட்டம் பெற்றிருப்பதாகவும் அவரது திறமை காரணமாக பணியமர்ப்பட்டதாகவும் பல்கலைக்கழகம் தெளிவுபடுத்தி இருக்கிறது. சீன பல்கலைக்கழகங்களில் கட்டாயமான பாடமான மாவோ சேதுங் சிந்தனையைக் கற்பிக்கும் ஜாங்கிர்க்கு டிக் டாக்கில் கிட்டத்தட்ட 430,000 பின் தொடர்பவர்கள் இருக்கின்றனர்.