Categories
தேசிய செய்திகள்

கல்லூரி இறுதி செமஸ்டர் ரத்து ? உச்சநீதிமன்றம் அதிரடி …!!

கல்லூரி இறுதியாண்டு தேர்வு நடத்துவது குறித்து மாணவர்கள் தொடர்ந்த வழக்கில் பதில் மனு தாக்கல் செய்யும்படி யுஜிசிக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியிருக்கிறது.

கொரோனா தொற்று காரணத்தால் சென்ற மார்ச் மாதம் முதல் நாட்டில் உள்ள அனைத்து கல்லூரிகளும், பல்கலைக்கழகங்களும் மூடப்பட்டன. தற்போது வரை எந்த தேர்வுகளும் நடத்தப்படவில்லை. தேர்வுகள் நடத்தப்படும் அல்லது முந்தைய மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்ச்சி வீதம் அறிவிக்கப்படுமா என்ற எதிர்பார்ப்புகளுடன் கல்லூரி இறுதியாண்டு மாணவர்கள் இருந்தார்கள். இந்த நிலையில் மத்திய உள்துறை அமைச்சகம், பல்கலைக்கழக கல்லூரி தேர்வுகள் நடத்த வேண்டும் என உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதனைத்தொடர்ந்து வருகின்ற செப்டம்பர் மாதத்திற்குள் பல்கலைக்கழக மற்றும் கல்லூரி இறுதியாண்டு தேர்வுகளை கட்டாயம் நடத்த வேண்டும் என்றும், அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளையும் யுஜிசி வெளியிட்டுள்ளது. இத்தகைய முடிவிற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு பல்கலைக்கழகங்களை சேர்ந்த 31 மாணவர்கள் வழக்குகள் தொடர்ந்து இருக்கின்றனர்.

மாணவர்கள் அளித்துள்ள மனுவில், யுஜிசி வழிகாட்டுதல்கள் தன்னிச்சையாக இருப்பதாகவும் கொரோனா நோய்த்தொற்றுக்கு மத்தியில் தேர்வுகள் எழுதுவதற்கு மாணவர்களை கட்டாயப்படுத்துவதாகவும் கூறியிருக்கின்றனர். இத்தகைய வழக்கானது நீதிபதிகள் அசோக் பூஷன், சுபாஷ் ரெட்டி, எம்.ஆர்.ஷா போன்றோர் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அந்த விசாரணையில், இந்த வழக்கில் யுஜிசி-க்கு பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர். இதன் அடுத்தகட்ட விசாரணையானது வருகின்ற 31ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |