குக் வித் கோமாளி பிரபலம் சிவாங்கி கல்லூரி இறுதி நாளில் தனது தோழிகளுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் வெளியாகியுள்ளது .
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் பிரபலமடைந்தவர் சிவாங்கி. இதையடுத்து இவர் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக வந்து கலக்கினார். இதைத் தொடர்ந்து இந்த நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனிலும் சிவாங்கி கோமாளியாக கலந்து கொண்டு ஏராளமான ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். சமீபத்தில் குக் வித் கோமாளி 2 நிகழ்ச்சி வெற்றிகரமாக நிறைவடைந்தது குறிப்பிடத்தக்கது .
மேலும் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் டான் படத்தில் சிவாங்கி நடித்து வருகிறார். அதேபோல் நடிகர் உதயநிதி நடிப்பில் உருவாகிவரும் ஒரு படத்திலும் சிவாங்கி இணைந்துள்ளார் . இந்நிலையில் கல்லூரி இறுதி நாளில் தனது தோழிகளுடன் இணைந்து சிவாங்கி எடுத்துக்கொண்ட புகைப்படம் வெளியாகியுள்ளது.