தமிழகத்தில் அதிக அளவு போதையால் குற்றங்கள் நடைபெற்று வருவதால் அதனை தடுக்கும் வகையில் அனைத்து மாவட்டங்களிலும் காவல் துறையினர் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றார்கள். அந்த வகையில் தாம்பரம் காவல் ஆய்வாளர் அமல்ராஜ் மற்றும் துணை ஆணையாளர் ஜோஸ் தங்கையா, உதவியணையாளர் முருகேசன் போன்றோரின் ஆணைக்கிணங்க சிட்லபாக்கம் காவல் ஆய்வாளர் மகுடேஸ்வரி தலைமையிலான குரோம்பேட்டை வைஷ்ணவா மகளிர் கல்லூரியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் கருத்தரிமை நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது.
இந்த நிகழ்ச்சியில் விருந்தினராக பங்கேற்ற நகைச்சுவை நடிகர் டாக்டர் தாமு மாணவிகளுக்கு போதை தடுப்பு பற்றி பல்வேறு விளக்கங்களுடன் மனதை நெகிழ்ச்சியூட்டும் முறையில் எடுத்துரைக்கும் விதமாக பேசியுள்ளார். மேலும் இந்த நாட்டிற்கும் நன்மை பெற்றவர்களுக்கும் நாம் நல்ல சமுதாயத்தை உருவாக்க வேண்டும் அதற்கு நாம் போதை இல்லாத சமுதாயத்தை உருவாக்க வேண்டும். இந்த நாளில் சபதம் ஏற்போம் என மாணவிகள் மத்தியில் பேசி உள்ளார். போதை பழக்கத்தால் அடிமையாகும் மாணவர்கள் மட்டும் இல்லாமல் அவர்களது குடும்பமும் எவ்வாறு நிலை குலைந்து போகிறது என்பதை விளக்கியுள்ளார்.
இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் தான் சந்தித்த சம்பவங்களை மாணவிகளிடம் பகிர்ந்துள்ளார். இந்த நிலையில் தாமுவின் பேச்சை கண்களை மூடி கேட்டுக் கொண்டிருந்த மாணவிகள் தங்களை அறியாமல் தேம்பி தேம்பி அழ தொடங்கியுள்ளனர். இது படிப்போர் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றது.