தமிழகத்தில் பல்கலைக்கழக தேர்வுகள் ரத்து செய்யப்பட்டதற்கான அரசாணை வெளியிடப்பட்டிருக்கிறது.
தமிழகத்தில் பல்கலைக்கழக தேர்வு ரத்து செய்யப்பட்டதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அதில் பல்வேறு விவரங்கள் இடம் பெற்றுள்ளன.
- செமஸ்டர் பருவத்தில் மாணவர்கள் பெற்றிருக்கின்ற தேர்வு மதிப்பெண்களில் 30% கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும்.
- தற்போதைய நடப்பு பருவத்தில் அகமதிப்பீட்டில் இருந்து 70 சதவீதம் மதிப்பெண் கணக்கில் எடுக்கப்படும்.
- இதனடிப்படையில் மொழி பாடங்களுக்கு மதிப்பெண் வழங்கப்படும்.
- செய்முறை தேர்வு நடத்தாமல் இருந்தால் அகமதிபேட்டினை அடிப்படையாகக் கொண்டு மதிப்பெண் அளிக்கப்படும்.
- மேலும் முந்தைய பருவத்தில் தேர்ச்சி ஆகாமல் இருந்தால் தேர்வுகளை பின்னர் எழுத நேரிடும் என்று விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.