தமிழகம் முழுவதும் கடந்த ஆண்டு கொரோனா பாதிப்பு உச்சத்தில் இருந்ததால் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டது. அதன்பிறகு கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து வந்த நிலையில் அரசு படிப்படியாக ஊரடங்கு தளர்வுகளை அறிவித்தது. அதன்படி பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்க அனுமதி வழங்கப்பட்டது. கோவில்களில் வழிபாட்டு தலங்களுக்கும் அரசு அனுமதி அளித்தது. இதுபோன்ற பல்வேறு தளர்வுகளை அரசு அறிவித்தது. ஆனால் தமிழகத்தில் கடந்த சில நாட்களாக மீண்டும் கொரோனா பாதிப்பு உச்சம் தொட தொடங்கியுள்ளது.
அதனால் அரசு சில கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு ஜனவரி 10-ஆம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டது. இந்நிலையில் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிப்பது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் மருத்துவ நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தினார். இதையடுத்து தமிழகம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும் புதிய வகை ஒமைக்ரான் அச்சுறுத்தல் காரணமாக கல்லூரி தேர்வுகள் மீண்டும் ஒத்தி வைக்கப்பட வாய்ப்புள்ளதாக உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி சற்றுமுன் தெரிவித்துள்ளார்.