Categories
சினிமா

கல்லூரி நாட்களில் எனக்கு ‘பிகில்’ என்று பெயர்…. நடிகர் சூர்யா….!!!!

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள லயோலா கல்லூரியில் படித்த முன்னாள் மாணவர்கள் சந்திக்கும் நிகழ்ச்சி இணையவழியாக நேற்று நடந்தது. அந்த நிகழ்ச்சியில் லயோலா கல்லூரியின் முன்னாள் மாணவரும், நடிகருமான சூர்யா பேசினார். அப்போது அவர், ‘‘முன்னாள் மாணவர் சந்திப்பு நிகழ்ச்சியின் மூலம் மீண்டும் லயோலா கல்லூரியில் படித்த நினைவுகள் கண்முன்னே வந்து சென்றது. கல்லூரி காலத்தில் எனக்கு பாடத்தெரியாது. பாடலுக்கு ‘விசில்’ அடித்து நான் மகிழ்ச்சியை வெளிப்படுத்துவேன். அதனால் என்னை ‘‘பிகில்’’ என்று கல்லூரியில் புனை பெயர் வைத்து கூப்பிடுவார்கள். தற்போதுள்ள நோய்த்தொற்று காலத்தில் அனைவரும் உடல்நலத்துக்கு முக்கியத்துவம் கொடுங்கள்’’ என்று பேசினார்.

Categories

Tech |