Categories
தேசிய செய்திகள்

கல்லூரி நிகழ்ச்சியில் நடனம் ஆடிய மாணவர்கள் சஸ்பெண்ட்… ஏன் தெரியுமா…? நிர்வாகம் அதிரடி…!!!!

கர்நாடக மாநிலத்தில் உள்ள மங்களூருவின் வமன்ஜூரில் தனியார் இன்ஜினியரிங் கல்லூரி ஒன்று அமைந்துள்ளது. இந்த கல்லூரியில் நேற்று மாணவர் சங்கத் துவக்க விழா நிகழ்ச்சி நடைபெற்ற போது 4 மாணவர்கள் மேடையில் ஏறி பாலிவுட் பாடலுக்கு நடனமாடியுள்ளனர். அப்போது 4 மாணவர்களும் இஸ்லாமிய மத பெண்கள் அணியும் மத உடையான புர்கா அணிந்தபடி மேடையில் ஏறி நடனமாடியுள்ளனர். இந்நிலையில் அந்த மாணவர்களின் நடனத்தை மேடைக்கு கீழே இருந்த மாணவ, மாணவிகள் ஆரவாரமாக கொண்டாடினர்.

இதனையடுத்து இந்த நடனம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வந்த நிலையில் கல்லூரி நிர்வாகம் 4 மாணவர்களையும் சஸ்பெண்ட் செய்துள்ளது. மேலும் “நடனத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்கள் அனைவரும் இஸ்லாமிய மதத்தை சேர்ந்தவர்கள் எனவும் சமூகம், கல்லூரியில் உள்ள அனைவருடைய  மத நல்லிணக்கத்திற்கு தீங்கு இழைக்கும் எந்த ஒரு நடவடிக்கையும் நிர்வாகம் அனுமதிக்காது” என நிர்வாகம்  கூறியுள்ளது.

Categories

Tech |