Categories
சினிமா

“கல்லூரி நிகழ்ச்சி” ஆண் பிள்ளைகளுக்கு இதை சொல்லி கொடுத்து வளர்க்கணும்…. நடிகை ஓவியா ஓபன் டாக்….. பரபரப்பு….!!!!!

நடிகை ஓவியா நடித்த திரைப்படங்கள் வெளியாகி பல வருடங்கள் ஆகிறது. அவரது முழு கவனமும் தனியார் நிகழ்ச்சிகளில் பங்கேற்றுகொள்வதில் தான் இருக்கிறது. ஏனெனில் இதற்கு தனியாக பெரிய தொகையை ஓவியா சம்பளமாக பெறுகிறார் என்று கூறப்படுகிறது. சில மாதங்களுக்கு முன் ஓவியா டுவிட்டர் வாயிலாக தன் மனதில் ஏற்பட்ட கருத்துக்களை வெளிப்படையாக தெரிவித்து வந்தார். இதன் காரணமாக அவருக்கு பெரிய ஆதரவு இருந்து வந்தது.
இந்நிலையில் ஒரு கல்லூரி நிகழ்ச்சியில் பங்கேற்று ஓவியா பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது அவர் கூறியிருப்பதாவது “கலாச்சாரம் எனும் பெயரில் எதையும் மறைக்காமல் அனைத்தையும் வெளிப்படையாக பேச வேண்டும். ஏனெனில் அப்போதுதான் தீர்வு கிடைக்கும். ஆண் பிள்ளைகளிடம் பெண் குழந்தைகளிடம் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என பெற்றோர்கள் சொல்லிக் கொடுத்து வளர்க்க வேண்டும். சிறுவயதில் இருந்தே அவ்வாறு வளர்த்தால் எவ்விதமான குற்ற செயல்பாடுகளிலும் ஆண் பிள்ளைகள் ஈடுபட மாட்டார்கள்” என அவர் பேசினார். இவ்வாறு ஓவியா பேசியது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

Categories

Tech |