கல்லூரி பேருந்து மீது லாரி மோதிய விபத்தில் 41 மாணவர்கள் காயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மாவட்டத்தில் உள்ள திட்டக்குடியில் இருக்கும் தனியார் இன்ஜினியரிங் கல்லூரியில் ஏராளமான மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் விருதாச்சலத்தில் இருந்து கல்லூரி பேருந்தில் சென்று கொண்டிருந்தனர். இந்த பேருந்து விருதாச்சலம்- வேப்பூர் சாலையில் சென்று கொண்டிருந்தபோது மாணவர்களை ஏற்றுவதற்காக சாத்தியம் கிராமத்தில் நின்றது.
அப்போது வேப்பூர் நோக்கி வேகமாக சென்ற லாரி கட்டுப்பாட்டை இழந்து கல்லூரி பேருந்து மீது மோதியதால் 41 மாணவ மாணவிகள் காயம் அடைந்தனர். இதனை பார்த்த பொதுமக்கள் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.