விழுப்புரம் அருகே தனியார் கல்லூரி பேருந்து மோதியதில் சிறுவன் ஒருவன் உயிரிழந்த சம்பவத்தில் சிசிடிவி காட்சி தற்போது வெளியாகியுள்ளது. பண்ருட்டியை சேர்ந்த ரஜினிகாந்த் என்பவர் தன்னுடைய தங்கை மற்றும் தங்கையின் மகன் கவி சர்மாவை பைக்கில் அழைத்து சென்றுள்ளார். அப்போது எதிரே வந்த தனியார் கல்லூரி பேருந்து பைக் மீது மோதியதில் 3 பேரும் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில் சிறுவன் கவி சர்மா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தான். இந்த சம்பவம் தொடர்பான பதபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது.
விழுப்புரம் : போட்டி போட்டுகோண்டு முந்திச்சென்ற கல்லூரி பேருந்து இருச்சக்கர வாகனத்தில் மோதி சிறுவன் உட்பட 2 பேர் பலி . சிசிடிவி காட்சிகள் @abpnadu pic.twitter.com/G5RSy08Ncp
— SivaRanjith (@Sivaranjithsiva) June 14, 2022