Categories
உலக செய்திகள்

“கல்லூரி மாணவரை உடலுறவுக்கு வற்புறுத்திய பெண்”…. கண்டனம் தெரிவித்த கோர்ட்…. பிரபல நாட்டில் பரபரப்பு….!!

டேட்டிங் வலைதளம் வழியே கல்லூரி மாணவர் ஒருவருக்கு அறிமுகம் ஆன இமோஜென் புரூக் என்ற 30 வயதுடைய பருமனான பெண். 

இங்கிலாந்து நாட்டில் சவுதாம்ப்டன் கிரவுன் கோர்ட்டில் விசித்திர வழக்கு ஒன்று விசாரணைக்கு வந்துள்ளது. இது குறித்து பாதிக்கப்பட்ட கல்லூரி மாணவர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ராபர்ட் பிரையான் கோர்ட்டில் கூறியதாவது, “30 வயதுடைய இமோஜென் புரூக், என்னுடைய கட்சிக்காரருடன் பாலியல் சார்ந்த நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார். அதுவும் அவரது ஒப்புதல் இல்லாமலேயே உடலியல் சார்ந்த கிளர்ச்சி என்பது முழுவதும் ஒப்புதலில் இருந்து வேறுபட்டுள்ளது. இந்த வழக்கில், இருவரும் டேட்டிங் வலைதளம் வழியே ஒருவருக்கு ஒருவர் அறிமுகம் ஆகியுள்ளனர். புரூக், சற்று பெரிய உருவம் மற்றும் பாதிக்கப்பட்ட நபரை விட வலிமையானவர்.

சட்ட காரணங்களுக்காக அந்த நபரின் பெயர் வெளியிடப்படவில்லை என கோர்ட்டில் தெரிவிக்கப்பட்டது. இந்த சம்பவம் ஹான்ட்ஸ் பகுதியில் சவுதாம்ப்டன் நகரில் உள்ள புரூக்கின் வீட்டில் நடந்துள்ளது. இதில், மதுபானம் அருந்திய பின்னர் அவர்கள் படுக்க சென்றுள்ளனர். மாணவர் தூங்க வேண்டும் என விரும்பியுள்ளார். ஆனால், புரூக் பாலியல் நடவடிக்கையில் ஈடுபட விருப்பம் கொண்டுள்ளார்.
அதனால், கல்லூரி மாணவரின் கையை பற்றி இழுத்து, அவருடன் பாலியல் உறவில் ஈடுபட்டுள்ளார். ஆனால், அதற்கு மாணவர் உடன்படவில்லை. இருப்பினும் அதனை கவனத்தில் கொள்ளாத புரூக் 15 நிமிடங்களுக்கு பின்னரே படுக்கையை விட்டு அகன்றுள்ளார். அதன் பின்னர் தூங்க சென்றுள்ளார். இதில் பாதிக்கப்பட்ட நபர் தூக்கமின்றி தவித்துள்ளார். நம்பிக்கையற்று போயுள்ளார் என கோர்ட்டில் வாதிடப்பட்டது.

இந்த சம்பவத்தின்போது, உருவில் தன்னை விட 2 மடங்கு பெரிய, வலிமையான பெண்ணான புரூக்கிடமிருந்து தன்னால் விலகி செல்ல முடியவில்லை என காவல்துறையினரிடம் மாணவர் கூறியுள்ளார். இனி இந்த உறவு  வேண்டாம் என கூறுவதே போதும் என அவர் நினைத்து இருக்கின்றார். அதனை நிறுத்த அவர் விரும்பியுள்ளார். ஆனால், அது நடக்கவில்லை. நடந்ததோ வேறு. நான் வேண்டாம் என கூறினாலும், ஒரு காதில் வாங்கி மறு காதில் விட்டது போல் அமைந்து விட்டது. நான் வன்முறைக்கு ஆளானது போன்று உணர்கின்றேன். நடந்த விசயங்களை என்னால் நம்பவே முடியவில்லை என மாணவர் புகாரில் தெரிவித்துள்ளார். ஆனால், ஒப்புதல் இல்லாமல் ஒரு நபருடன் பாலியல் சார்ந்த நடவடிக்கையில் ஈடுபட்ட குற்றச்சாட்டை புரூக் மறுத்துள்ளார். கோர்ட்டில், அந்த சம்பவம் குறித்து தன்னால் நினைவுகூர முடியவில்லை என புரூக் கூலாக பதிலளித்துள்ளார். இதனை கேட்ட நீதிபதிகள் அதிர்ச்சியடைந்தனர். மேலும் கோர்ட்டு அவருக்கு கண்டனம் தெரிவித்துள்ளது” என்பது குறிப்பிடத்தக்கது. பொதுவாக, பாலியல் குற்றவாளி ஆணாகவும், அந்த குற்றத்தில் பாதிக்கப்படும் நபர் பெண்ணாகவும் இருப்பது வழக்கம். அது தவறான கருத்து. தவறான பார்வைகளை மக்கள் கொண்டுள்ளனர் என்பதே சரியானது என மாணவர் சார்பில் வாதிட்ட பிரையான் கூறியுள்ளார். இந்த வழக்கு தொடர்ந்து  நடந்து வருகின்றது.

Categories

Tech |