ஆட்டோ மீது கார் மோதிய விபத்தில் ஓட்டுனர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பிரம்மதேசம் பகுதியில் முருகன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஆட்டோ ஓட்டுனராக வேலை பார்த்து வந்துள்ளார். இவர் வழக்கம் போல் சவாரிக்கு சென்றுள்ளார். இவர் மண்ணிவாக்கம் அருகே இருக்கும் பாலத்தின் மீது சென்றுள்ளார். அப்போது அவ்வழியே வேகமாக வந்த கார் ஒன்று ஆட்டோ மீது பலமாக மோதியது. இந்த விபத்தில் ஆட்டோ ஓட்டுநர் மேம்பாலத்தின் கீழே தூக்கி வீசப்பட்டார். இதில் பலத்த காயம் அடைந்த முருகன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர் காரில் வந்த வாலிபர்களை பிடித்து ஓட்டேரி காவல்நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர். அதன்பிறகு சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் முருகனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில் காரை ஓட்டி வந்தவர் கல்லூரி மாணவரான கிரண் என்பது தெரியவந்தது. அவருடன் படிக்கும் சக மாணவர்களான தர்ஷன் பிரசாத், நித்தின், சுனில் குமார் ஆகியோர் உடனிருந்துள்ளனர். இதில் கிரண் என்பவருக்கு பிறந்தநாள் என்பதால்அதை கொண்டாடிவிட்டு காரில் உற்சாகமாக வந்ததும் தெரிய வந்துள்ளது. இவர்களிடம் காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.