தமிழகத்தில் அனைத்து பல்கலைக்கழகங்களிலும் அரியர் தேர்வு நடத்த வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. கொரோனா காரணமாக தேர்வுகள் நடத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டதால், அரியர் வைத்துள்ள கல்லூரி மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி என தமிழக அரசு அறிவித்தது.
இதனை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் அரியர் தேர்வுகளையும் ரத்து செய்யும்படி பல்கலைக்கழக அரசாணை மூலம் எப்படி கட்டாயப்படுத்த முடியும் என தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. இந்நிலையில் மாணவர்களை பல கல்லூரிகள் அரியர் தேர்வு எழுத நிர்பந்தம் செய்துள்ளன.
இதனை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இன்று அதன் விசாரணையில், அனைத்துப் பல்கலைக்கழகங்களிலும் அரிய தேர்வு நடத்துவது குறித்த அட்டவணையை பிப்ரவரி 4ம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் கொரோனா சூழல் மாறியுள்ளதால் அரியர் தேர்வுகளை நடத்த பல்கலைக்கழகங்கள் முடிவு செய்துள்ளதாக தமிழக அரசு உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.