Categories
மாநில செய்திகள்

கல்லூரி மாணவர்களுக்கு ஆகஸ்ட் 23 முதல்…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

கொரோனா தொற்று பரவல் காரணமாக தமிழகத்தில் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்ட நிலையில் மாணவர்களுக்கு மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் தமிழகத்தில் உள்ள 143 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான பணிகளை தொடங்க கல்லூரிக் கல்வி இயக்ககம் உத்தரவிட்டுள்ளது. ஆகஸ்ட் 23-ஆம் தேதி தொடங்கி செப்டம்பர் 3ம் தேதிக்குள் ஆன்லைன் அல்லது ஆஃப்லைனில் கலந்தாய்வு நடத்தி மாணவர் சேர்க்கையை நடத்த வேண்டும். பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழ் மற்றும் இதர சான்றிதழ்களை சரி பார்த்த பின்னரே சேர்க்கையை உறுதி செய்யவும், வன்னியர்களுக்கான 10.5% இட ஒதுக்கீட்டை பின்பற்ற உத்தரவிட்டுள்ளது.

Categories

Tech |