தமிழகத்தில் முதல்வர் முக ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி அமைந்ததையடுத்து அரசு துறையில் பல்வேறு அதிரடியான மாற்றங்களை எடுத்து வருகிறது. குறிப்பாக பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்து வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் பிரிவு கல்லூரி மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்கும் திட்டத்தில் பெற்றோரின் ஆண்டு வருமான வரம்பை உயர்த்தி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்கும் திட்டத்தில் பெற்றோர் ஆண்டு வருமான வரம்பு ரூ.2 லட்சத்தில் இருந்து 2.5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.
Categories