தமிழகத்தில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்காக அரசு பல நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறது. அவ்வகையில் சீர்மரபினர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. தஞ்சை மாவட்ட ஆட்சியர் இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்தியில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் மற்றும் தனியார் கல்லூரிகளில் இளங்கலைமூன்றாம் ஆண்டு படிப்புகளில் பயிலும் சீர் மரபினர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை பெறுவதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்ட வருகின்றன.
இரண்டு மற்றும் மூன்றாம் ஆண்டு மாணவர்களின் புதுப்பிக்கும் விண்ணப்பங்களை இன்றுக்குள் சமர்ப்பிக்க வேண்டும். இந்த கல்வி உதவித்தொகை பெறுவதற்கு மாணவர்களின் பெற்றோர்கள் ஆண்டு வருமானம் 2 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய்க்கு மிகாமல் இருக்க வேண்டும் எனவும் இதற்கு விருப்பம் உள்ளவர்கள் https://www.bcmbcmw.tn.gov.in/ welfschemes.htm//scholarship schemes என்ற இணையதளத்தில் கூடுதல் விவரங்களை தெரிந்து கொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.