தமிழகத்தில் கொரோனா காரணமாக ஆன்லைனில் செமஸ்டர் தேர்வு நடத்த வேண்டி மாநிலம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் கல்லூரி மாணவர்கள் போராட்டம் நடத்தினர். அதனால் வீட்டில் இருந்தே தேர்வு எழுதும் ஓப்பன் புக் தேர்வு நடத்தப்படும் என்று உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி அறிவித்தார். அந்த தேர்வில் மாணவர்கள் குறிப்பிட்ட நேரத்திற்குள் தேர்வு எழுதி விடைத்தாள்களை ஆன்லைன் மூலமாக சமர்ப்பிக்க வேண்டும். ஜனவரி மாதம் தொடங்கிய செமஸ்டர் தேர்வுகள் கடந்த மாதம் முடிவடைந்தது.
இந்த நிலையில் தற்போது குறிப்பிட்ட நேரத்திற்குள் விடைத்தாள்களை பதிவேற்றம் செய்யாத காரணத்தால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு அண்ணா பல்கலைக்கழகம் ஆப்சென்ட் போட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் அனைவரும் தேர்வில் தோல்வி அடைந்துள்ளனர். குறிப்பிட்ட கால கெடுவுக்குள் விடைத்தாளை அனுப்பி வைக்காததால் மதிப்பீடு செய்யப்படவில்லை என பல்கலைக்கழகம் விளக்கம் அளித்துள்ளது.
இந்நிலையில் தாமதமாக பதிவேற்றம் செய்த விடைத்தாள் திருத்தம் செய்யப்படும் என்று உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி சற்றுமுன் அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு மாணவர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.