தமிழ் வளர்ச்சித் துறையின் நடப்பு ஆண்டிற்கான மாநில கோரிக்கை அறிவிப்பில், நாட்டிற்காக பாடுபட்ட தலைவர்களான மகாத்மா காந்தி, அண்ணல் அம்பேத்கர், பேரறிஞர் அண்ணா, ஜவஹர்லால் நேரு, தந்தை பெரியார் மற்றும் முத்தமிழ் அறிஞர் கலைஞர் ஆகியோரின் பிறந்தநாள் அன்று மாவட்ட அளவில் கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்களுக்கு பேச்சுப் போட்டிகள் நடத்தி பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பின்படி முத்தமிழ் அறிஞர் கலைஞர் பிறந்த நாளான ஜூன் மூன்றாம் தேதி முற்பகலில் கல்லூரி மாணவர்களுக்கு பேச்சுப் போட்டிகள் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வளர்ச்சி மன்ற கூட்ட அரங்கில் நடைபெற உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இதில் அரசு, தனியார், பொறியியல் கல்லூரிகள்,அரசு உதவி பெறும் கலை கல்லூரிகள் மற்றும் பல் தொழில்நுட்ப கல்லூரி மாணவர்கள் பங்கேற்கலாம் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். இந்தப் போட்டி குறித்த முக்கிய விவரங்கள் அனைத்தும் கல்லூரிகளுக்கு நேரடியாக அனுப்பப்படும். இந்தப் போட்டியில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு முதல் பரிசு 5 ஆயிரம் ரூபாய், இரண்டாம் பரிசு 3,000 ரூபாய்,மூன்றாம் பரிசு 2,000 ரூபாய் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.