தமிழகத்தில் தொடர்ச்சியாக அமல்படுத்தப்பட்டு வந்த ஊரடங்கு காரணமாக பாதிப்பு சற்று குறைந்து வருவதால் பல்வேறு புதிய தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது. அந்தவகையில் செப்டம்பர்-1 ஆம் தேதி முதல் கல்லூரிகளைத் திறக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. இதனால்கல்லூரிகளை திறப்பதற்கான முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் 18 வயதுக்கு மேற்பட்ட கல்லூரி மாணவர்களுக்கு இன்று முதல் செப்டம்பர்-1 ஆம் தேதிக்குள் கட்டாயம் தடுப்பூசி செலுத்த வேண்டும் என்று பொதுசுகாதாரத்துறை அறிவித்திருந்த நிலையில், இன்று முதல் தடுப்பூசி போடும் பணி தொடங்கியுள்ளது. மாணவர்கள் காலை முதலே காத்திருந்து தடுப்பூசி செலுத்தி வருகின்றனர்.