தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக பள்ளி கல்லூரிகள் மூடப்பட்டன. இதனால் பாடங்கள் ஆன்லைன் வழியாக நடத்தப்படுகிறது. இதற்கு மத்தியில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக அனைத்து மாணவர்களும் ஆல்பாஸ் செய்யப்பட்டனர். இதைத் தொடர்ந்து 10, 12ஆம் வகுப்பு முடித்த மாணவர்கள் தங்களுடைய உயர்கல்வியைத் தொடர்வதற்கு கல்லூரியில் சேர வேண்டும்.
மேலும் இரண்டாம் ஆண்டு மூன்றாம் ஆண்டு பயிலும் மாணவர்களும் வீட்டிலிருந்தே படித்து வருவதால் கல்லூரி எப்போது தொடங்கும்? என்று எதிர்பார்த்து கொண்டிருக்கினறனர். இந்நிலையில் ஆகஸ்ட்-1 ஆம் தேதி முதல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை தொடங்கும் என்று உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். கல்லூரிகளை திறப்பது தொடர்பாக முதல்வருடன் பேசி முடிவெடுக்கப்படும் என்றும், உயர்கல்வியில் ஆஸ்திரேலிய அரசுடன் இணைந்து செயல்பட புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.