சென்னை ஐஐடியில் மாணவர்களுக்கு கொரோனா பரவியதால் அனைத்து மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு விடுமுறை அளிக்க பல்கலைக்கழக நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்திற்கு கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதனால் ஆன்லைன் மூலமாக மாணவர்களுக்கு வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. தமிழகத்தில் பள்ளிகள் திறப்பதற்கு மாணவர்களின் பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், பள்ளிகள் திறப்பது பற்றி தமிழக அரசு எந்த ஒரு முடிவையும் வெளியிடவில்லை. அதன் பிறகு கல்லூரி இறுதியாண்டு மாணவர்களுக்கு மட்டும் கல்லூரிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடந்து கொண்டிருக்கின்றன.
இந்நிலையில் சென்னை ஐஐடியில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு கொரோனா பரவியது. அதனால் அண்ணா பல்கலைக்கழக விடுதிகளில் தங்கியுள்ள மாணவர்களுக்கு இன்று மருத்துவ குழுவினர் கொரோனா பரிசோதனை செய்கின்றனர். மாணவர்களுக்கு அறிகுறிகள் இருந்தால் அல்லது தொற்று உறுதி செய்யப்பட்டால் விடுமுறை அளிக்க பல்கலைக்கழக நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. மேலும் ஐஐடி மாணவர்கள் மற்றும் ஊழியர்களுக்கு கொரோனா பரவியதை அடுத்து அனைத்து துறைகள் மற்றும் ஆய்வு மையங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன.